Wednesday, August 10, 2011

உடல் எடையை குறைக்க வேண்டுமா?


உடல் எடையை குறைக்க வேண்டுமா? 

கீழே படிங்க.


       
        உங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா? கவலையே வேண்டாம். மாயாஜாலமில்லை, மந்திரமில்லை. கீழே கொடுக்கப்பட்ட டயட் உணவை  சரியாக கடைபிடித்தாலே கண்டிப்பாக எடையை குறைக்கலாம். இதற்கு உங்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் தேவை.

சேர்க்க வேண்டிய உணவுகள்:  
6.00 AM 
GREEN TEA - யை  பால், சர்க்கரை இல்லாமல் காய்ச்சிய சுடு நீரில் போட்டு 10  நிமிடம் கழித்து பருக வேண்டும்.8.00 AM
வேக  வைத்த பாசிப்பயிறு (அ) கொண்டைகடலை, சுண்டல் (அ) காணப்பயிறு + ஒரு கப் பச்சை காய்கறிகள்.

11.00 AM
முட்டைகோஸ் சூப்  (அ) காய்கறி சூப்.


1.00 PM
ஒரு கப் சாதம் + ஒரு கப் காய்கறிகள் + ஒரு கப் கீரை.

4.00 PM
GREEN TEA + ஒரு  ஆப்பிள் (அ)  ஒரு ஆரஞ்சு (அ) ஒரு கொய்யா (அ) ஒரு கீத்து பப்பாளி.

7.30 PM
கம்பு (அ) கேப்பை (அ) கேழ்வரகு தோசை (2 NOS) + தக்காளி சட்டினி மட்டும்.


தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்:

 


        கோதுமை, ஓட்ஸ், மண்ணிற்கு அடியில் விளையும் காய்கறிகள், மற்றும் கிழங்குகள், இனிப்பு வகைகள், பேக்கரி வகைகள், பொறித்த உணவுகள், தேங்காய், மட்டன், முட்டை, சிக்கன், மீன், பால் பொருட்கள், இனிப்பு வகையான பழங்கள் ( வாழை, சப்போட்டா, திராட்சை, மாம்பழம், பலாப்பழம்), பேரிட்சை, பருப்பு ( முந்திரி, பாதாம், பிஸ்தா), கூல்ட்ரிங்க்ஸ், சாக்கலேட்ஸ், பிஸ்கட்ஸ், ஐஸ்கிரீம், பார்லி, எண்ணெய் பண்டங்கள் மற்றும் பலகாரங்கள்.

எளிமையான உடற்பயிற்சிகள்:
            ரொம்ப கடினமான உடற்பயிற்சிகள்  தேவையில்லை. வெறும் கயிற்றை வைத்தே உடற்பயிற்சி செய்யலாம். அதுதான் POCKET ROPE GYM.  வெறும் 250 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கிறது. அதோடு, உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்ற குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.  அதில் கொடுத்துள்ள உடற்பயிற்சிகளை மட்டும் செய்தால் போதுமானது.
           கண்டிப்பாக இரண்டே வாரத்தில் சுமார் மூன்று கிலோ எடையை குறைத்து விடலாம்.

          மேற்கண்ட உணவு கட்டுப்பாடும், உடற்பயிசியும் கடைபிடிப்பதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இருந்தாலும் மிக மிக அதிக எடை உள்ளவர்கள் கண்டிப்பாக OBESITY DOCTOR மூலம் ஆலோசனை செய்த பின்னர் இம்முறைகளை கடைபிடிக்கவும். ஏனெனில் அவர்களுக்கு அதிகப்படியான எடையை குறைக்க மாத்திரைகளும், மருந்துகளும் கொடுப்பார்கள்.


        உடல் எடையை குறைத்த பின்னர் சரிவிகித உணவும், சீரான உடற்பயிசியும் அவசியம் தேவை. அப்பொழுது தான் குறைத்த எடையை கூடாமல் சீராக வைத்துக் கொள்ள முடியும்.

உடல் எடையை குறைக்க வேண்டுமா ?


உடல் எடையை குறைக்க வேண்டுமா ?


இன்றைய அவசர உலகின் மிக பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பது தான்.மனம் போன போக்கில் உணவு கட்டு பாடு இல்லாமல் கண்டதையும் உள்ளே தள்ளுவதும்,உக்காந்த இடத்திலேயே கணணி முன் நேரத்தை விரயமாக்குவதும் தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணமாகும்.

அது சரி இந்த பிரச்சனையை எப்படி இல்லாமல் செய்வது அல்லது உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்பதை பற்றி பாப்போம் , பல வருட ஆரய்சிக்குபின் மருத்துவர்கள்  உடல் எடைய குறைக்க மிகவும் சுலபமான உடற்பயிற்சியை கண்டுபிடித்துள்ளனர்.இது  100% பயனளிக்க கூடியது, எந்த இடத்திலும் எந்தநேரத்திலும் மிக சுலபமா செய்ய கூடிய உடற் பயிற்சியாகும்.இந்த உடற்பயிற்சிகள் படத்துடன் கீழே தரப்பட்டுள்ளது
நீங்களும் முயற்சித்து பாருங்கள கண்டிப்பாக பலன் கிடைக்கும்...

முதலில் நாற்காலியில் உட்கார்ந்து இட  பக்கம் பார்கவும் ....

      
அடுத்து  நாற்காலியில் உட்கார்ந்து வல  பக்கம் பார்கவும் .... 

நண்பர்கள் யாரவது மச்சி வாடா சின்ன பீஸ் ,இங்க பாரு சூப்பர் அய்டம்னு சொல்லி கால்ல விழுந்து கூப்பிட்டலோ மேற்கூறிய உடற் பயிற்சிகளை முயற்சித்து பார்கவும் கண்டிப்பாக பலன் கிடைக்கும் .

எடை குறைக்கும் உணவு******* bksureshv@gmail.com


எடை குறைக்கும் உணவு

ஆயுர்வேதத்தின் அடிப்படை தத்துவம் மூன்று தோஷங்கள். மூன்று தோஷங்களையும் சமநிலையில் வைத்தால் உடலுக்கு பல நன்மைகளும் ஏற்படும். ஒன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதீத உடல் எடையும் குறையும். அதீத உடல் குறைந்து உடல் வனப்பாகவும், வலிவாகவும் இருக்கும். இந்த மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமநிலையில் வைக்க சில ஆயுர்வேத உணவுகள் உதவுகின்றன. அவை சமைத்த ஓட்ஸ், சப்பாத்திகள், கிச்சடி, பயத்தம் பருப்பு சூப், சுரைக்காய் ஸ்குவாஷ், பச்சை இலை காய்கறிகள், வேக வைத்த பழம், லஸ்ஸி, இஞ்சி எலுமிச்சம் பழம் பானம், மசாலா டீ, மசாலா பால், மாதுளம் பழம் சட்னி முதலியன. 

சில வகை உணவுகள் மூன்று தோஷத்தையும் சமச்சீராக ஆக்குபவை. இவற்றில் சில குறிப்பாக எடை குறைக்க உதவுபவை. இவை கீழே விவரிக்கப்பட்டிருக்கின்றன.
கிச்சடி – முக்கியமாக பயத்தம் பருப்பும், அரிசி கலந்த உணவு கூட சேர்க்கப்படும் பல வகை மூலிகைகளும் வாசனை திரவியங்களும் கிச்சடியை மருந்து உணவாக மாற்றுகின்றன. ஆயுர்வேத சிகிச்சையில் கிச்சடி பத்திய உணவாக பரிந்துரைகப்படுகிறது. காரணம் சுலபமாக ஜீரணமாகும், சுலபமாக உட்கிரகிக்கப்படும். எந்த தோஷத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கிச்சடியை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குறிப்பாக வாத தோஷம் உள்ளவர்களுக்கு கிச்சடி மிகவும் ஏற்றது.

தேவை
பாஸ்மதி அரிசி – 3/4 கப்
பயத்தம் பருப்பு (உடைத்தது) – 1/2 கப்
நெய் (அ) நல்லெண்ணெய் – 1/2 டே. ஸ்பூன்
ஜீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
இஞ்சி – 1/2 இன்ச் (துண்டு செய்யப்பட்டது)
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
மிளகாய்பொடி – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 4 – 6 கப் (அழிந்த கிச்சடி தேவையா (அ) உதிரியான கிச்சடி தேவையா என்பதை பொருத்து)
செய்முறை
அரிசியையும், பருப்பையும் நன்கு கழுவவும். கலந்து வைக்கவும்.
அடிகனமுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் / எண்ணெய்யை காய்ச்சவும். எண்ணெய் அல்லது நெய் காய்ந்தவுடன் பெருங்காயம், ஜீரகம், கடுகு சேர்க்கவும்.
இவை வெடித்தவுடன் இஞ்சியை சேர்க்கவும். அரை நிமிடம் வதக்கவும்.
அரிசி, பயத்தம்பருப்பு, மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப்பொடி சேர்க்கவும்.
நன்றாகக் கலக்கவும்.

தண்ணீரை சேர்க்கவும். பாத்திரத்தை மூடி தீயைக் குறைத்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். முப்பது நிமிடம் வேகவிடவும்.
தீயை அணைத்து ஐந்து நிமிடங்கள் கிச்சடியை அப்படியே வைக்கவும்.
ப்ரஷர் குக்கரை உபயோகப்படுத்தினால் கிச்சடியை 1 விசில் வரும் வரை வேக விடவும். குக்கரை குளிர விடவும்.

கிச்சடியை ஸ்பூனால் மெதுவாக கிளறி சிறிது நெய் விட்டு பரிமாறவும்.
மஞ்சள், பயத்தம்பருப்பு சூப்
இந்த சூப் சிறந்த ஆயுர்வேத பத்திய உணவு. கப, வாததோஷங்களைக் கண்டிக்கும். இதில் உபயோகப்படுத்தப்படும் வாசனை திரவியங்களும், கொத்தமல்லியும், பித்ததோஷத்தைக் குறைக்கும். இது லேசான, சுலபமாக ஜீரணிக்கும் உணவு. இதை குடிப்பதால் உடல் எடை ஏறாது.

தேவை
மஞ்சள், பயத்தம்பருப்பு – 1 கப்
தண்ணீர் – 6 கப்
கடுகு – 1/2 டீஸ்பூன்
ஜீரகம் – 1 டீஸ்பூன்
நெய் – 2 டே.ஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
நறுக்கிய கொத்தமல்லி தழை – 2 டே. ஸ்பூன்
கல் உப்பு (பாறை உப்பு) – 1/2 டீஸ்பூன்
பொடித்த தனியா – 1/2 டீஸ்பூன்
செய்முறை

பருப்பைக் கழுவவும்.
ஒரு பாத்திரத்தில் பருப்பையும், தண்ணீரையும் விட்டு 30 நிமிடம் கொதிக்க விடவும்.
அவ்வவ்போது நன்றாகக் கிளறி விடவும். இதனால் பருப்பும், வெந்து குழைந்து விடும்.
வேறொரு பாத்திரத்தில் நெய்யை சூடுபடுத்தவும்.
எல்லா மசாலாக்களையும் சேர்க்கவும்.
இந்த மசாலாக்களையும், நெய்யையும் வெந்து கொண்டிருக்கும் பருப்பு சூப்பில் சேர்க்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லிதழையைத் தூவவும்.
இந்த சூப்பை அப்படியே அருந்தலாம் (அ) சப்பாத்தி (அ) சாதத்திற்கு சேர்த்துக் கொண்டு சாப்பிடலாம்.

இந்த உணவை தவிர எடை குறைக்க எளிய வழிகள்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு எலுமிச்சைபழத்தின் சாற்றுடன் ஒரு டீஸ்பூன் தேனைச் சேர்த்துக் குடிக்கவும்.

நிறைய தண்ணீர் குடிக்கவும். இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் நீங்கும்.
பழங்கள், காய்கறிகள் உண்பதை அதிகரிக்கவும்.

புதினா, கேரட், இஞ்சி, லவங்கப்பட்டை மற்றும் கருமிளகு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும். இவை நச்சுப்பொருட்களை உடலிலிருந்து நீக்கும் ஆற்றல் உடையவை.
நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ், பீன்ஸ், பருப்புகள், பழங்கள், காய்கறிகள் முதலியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
தவறாமல் உடற்பயிற்சி செய்யவும். இல்லையென்றால் தினசரி நடக்கவும். அல்லது நீச்சல் அடிக்கவும்.


எடை, குறைக்கும், உணவு, ஆயுர்வேதம், உடல் ஆரோக்கியம், உடல் எடை, வாதம், பித்தம், கபம், ஆயுர்வேத உணவுகள், ஓட்ஸ், சப்பாத்திகள், கிச்சடி, பயத்தம் பருப்பு சூப், சுரைக்காய் ஸ்குவாஷ், பச்சை இலை காய்கறிகள்,
மருந்து, ஆயுர்வேத சிகிச்சை, கிச்சடி, செய்முறை, அரிசி, பருப்பு, நெய், பெருங்காயம், ஜீரகம், மஞ்சள், பயத்தம்பருப்பு, சூப், செய்முறை, பருப்பு, மசாலா, நெய், கொத்தமல்லி, உடலில், நச்சுப்பொருட்கள், பழங்கள், காய்கறிகள், உடற்பயிற்சி,
எடை குறைக்கும் உணவுஆயுர்வேதத்தின் அடிப்படை தத்துவம் மூன்று தோஷங்கள். மூன்று தோஷங்களையும் சமநிலையில் வைத்தால் உடலுக்கு பல நன்மைகளும் ஏற்படும். ஒன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதீத உடல் எடையும் குறையும். அதீத உடல் குறைந்து உடல் வனப்பாகவும், வலிவாகவும் இருக்கும். இந்த மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமநிலையில் வைக்க சில ஆயுர்வேத உணவுகள் உதவுகின்றன. அவை சமைத்த ஓட்ஸ், சப்பாத்திகள், கிச்சடி, பயத்தம் பருப்பு சூப், சுரைக்காய் ஸ்குவாஷ், பச்சை இலை காய்கறிகள், வேக வைத்த பழம், லஸ்ஸி, இஞ்சி எலுமிச்சம் பழம் பானம், மசாலா டீ, மசாலா பால், மாதுளம் பழம் சட்னி முதலியன. சில வகை உணவுகள் மூன்று தோஷத்தையும் சமச்சீராக ஆக்குபவை. இவற்றில் சில குறிப்பாக எடை குறைக்க உதவுபவை. இவை கீழே விவரிக்கப்பட்டிருக்கின்றன.கிச்சடி – முக்கியமாக பயத்தம் பருப்பும், அரிசி கலந்த உணவு கூட சேர்க்கப்படும் பல வகை மூலிகைகளும் வாசனை திரவியங்களும் கிச்சடியை மருந்து உணவாக மாற்றுகின்றன. 
ஆயுர்வேத சிகிச்சையில் கிச்சடி பத்திய உணவாக பரிந்துரைகப்படுகிறது. காரணம் சுலபமாக ஜீரணமாகும், சுலபமாக உட்கிரகிக்கப்படும். எந்த தோஷத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கிச்சடியை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குறிப்பாக வாத தோஷம் உள்ளவர்களுக்கு கிச்சடி மிகவும் ஏற்றது. 
தேவைபாஸ்மதி அரிசி – 3/4 கப்பயத்தம் பருப்பு (உடைத்தது) – 1/2 கப்நெய் (அ) நல்லெண்ணெய் – 1/2 டே. ஸ்பூன்ஜீரகம் – 1 டீஸ்பூன்கடுகு – 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்இஞ்சி – 1/2 இன்ச் (துண்டு செய்யப்பட்டது)மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்உப்பு – 1/2 டீஸ்பூன்மிளகாய்பொடி – 1/2 டீஸ்பூன்தண்ணீர் – 4 – 6 கப் (அழிந்த கிச்சடி தேவையா (அ) உதிரியான கிச்சடி தேவையா என்பதை பொருத்து)செய்முறைஅரிசியையும், பருப்பையும் நன்கு கழுவவும். கலந்து வைக்கவும். அடிகனமுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் / எண்ணெய்யை காய்ச்சவும். எண்ணெய் அல்லது நெய் காய்ந்தவுடன் பெருங்காயம், ஜீரகம், கடுகு சேர்க்கவும். 
இவை வெடித்தவுடன் இஞ்சியை சேர்க்கவும். அரை நிமிடம் வதக்கவும். அரிசி, பயத்தம்பருப்பு, மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப்பொடி சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். தண்ணீரை சேர்க்கவும். பாத்திரத்தை மூடி தீயைக் குறைத்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். முப்பது நிமிடம் வேகவிடவும். தீயை அணைத்து ஐந்து நிமிடங்கள் கிச்சடியை அப்படியே வைக்கவும்.ப்ரஷர் குக்கரை உபயோகப்படுத்தினால் கிச்சடியை 1 விசில் வரும் வரை வேக விடவும். 
குக்கரை குளிர விடவும்.கிச்சடியை ஸ்பூனால் மெதுவாக கிளறி சிறிது நெய் விட்டு பரிமாறவும். மஞ்சள், பயத்தம்பருப்பு சூப்  இந்த சூப் சிறந்த ஆயுர்வேத பத்திய உணவு. கப, வாததோஷங்களைக் கண்டிக்கும். இதில் உபயோகப்படுத்தப்படும் வாசனை திரவியங்களும், கொத்தமல்லியும், பித்ததோஷத்தைக் குறைக்கும். இது லேசான, சுலபமாக ஜீரணிக்கும் உணவு. இதை குடிப்பதால் உடல் எடை ஏறாது.தேவைமஞ்சள், பயத்தம்பருப்பு – 1 கப்தண்ணீர் – 6 கப்கடுகு – 1/2 டீஸ்பூன்ஜீரகம் – 1 டீஸ்பூன்நெய் – 2 டே.ஸ்பூன்பெருங்காயம் – 1 சிட்டிகைநறுக்கிய கொத்தமல்லி தழை – 2 டே. ஸ்பூன்கல் உப்பு (பாறை உப்பு) – 1/2 டீஸ்பூன்பொடித்த தனியா – 1/2 டீஸ்பூன்செய்முறைபருப்பைக் கழுவவும். ஒரு பாத்திரத்தில் பருப்பையும், தண்ணீரையும் விட்டு 30 நிமிடம் கொதிக்க விடவும்.
அவ்வவ்போது நன்றாகக் கிளறி விடவும். இதனால் பருப்பும், வெந்து குழைந்து விடும். வேறொரு பாத்திரத்தில் நெய்யை சூடுபடுத்தவும்.எல்லா மசாலாக்களையும் சேர்க்கவும். இந்த மசாலாக்களையும், நெய்யையும் வெந்து கொண்டிருக்கும் பருப்பு சூப்பில் சேர்க்கவும். அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லிதழையைத் தூவவும். இந்த சூப்பை அப்படியே அருந்தலாம் (அ) சப்பாத்தி (அ) சாதத்திற்கு சேர்த்துக் கொண்டு சாப்பிடலாம். இந்த உணவை தவிர எடை குறைக்க எளிய வழிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு எலுமிச்சைபழத்தின் சாற்றுடன் ஒரு டீஸ்பூன் தேனைச் சேர்த்துக் குடிக்கவும். 
நிறைய தண்ணீர் குடிக்கவும். இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் நீங்கும். பழங்கள், காய்கறிகள் உண்பதை அதிகரிக்கவும். புதினா, கேரட், இஞ்சி, லவங்கப்பட்டை மற்றும் கருமிளகு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும். இவை நச்சுப்பொருட்களை உடலிலிருந்து நீக்கும் ஆற்றல் உடையவை.நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ், பீன்ஸ், பருப்புகள், பழங்கள், காய்கறிகள் முதலியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். தவறாமல் உடற்பயிற்சி செய்யவும். இல்லையென்றால்தினசரி நடக்கவும். அல்லது நீச்சல் அடிக்கவும்.

உடல் எடையைக் குறைக்க 12 வழிகள்.


உடல் எடையைக் குறைக்க 12 வழிகள்.


bksureshv@gmail.com


 overweight.jpg
ஓவர் வெயிட் உயிருக்கு ஆபத்து. உங்கள் இடுப்புப் பெல்ட் பெருக்கப் பெருக்க உங்கள் ஆயுள் குறைகிறது என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. உடல் எடையைக்குறைக்க 100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள் என்ற நூலில் இருக்கும் தகவல்கள் இதோ !
01. உப்பு உடலை உப்ப வைக்கும், உப்பை அளவோடு சாப்பிடுங்கள்.
02. நொறுக்குத் தீனி சாப்பிடுவதை அறவே விட்டுவிடுங்கள்.
03. தினமும் குறைந்தது நாலு கி.மீ. நடவுங்கள்.
04. கொழுப்பு சத்துள்ள உணவை தவிருங்கள்.
05. இனிப்பு, மாவு, மசாலா, எண்ணெய்ப் பொருட்களை சாப்பிட வேண்டாம்.
06. பசிக்காத போது சாப்பிட வேண்டாம்.
07. உணவை அளவோடு சாப்பிடுங்கள். சுவை கருதி உணவை ஒரு பிடி பிடித்துவிடாதீர்கள்.
08. குளிர்ந்த நீர், மோர் என்பவற்றைக் குடியுங்கள்.
09. எடை கூடிவிட்டதே என்று கவலைப்படாதீர்கள்.
10. உங்கள் எடையைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தால் ஆயுளில் 13 சத வீதம் குறையும்.
11. பட்டினி கிடப்பதால் உடல் எடை குறையாது, உடலுக்கு கெடுதலே வரும்.
12. ஒழுங்கு முறையாக தேகப்பயிற்சி செய்யுங்கள்.
உங்கள் உடலில் நோய் அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும் பரிசோதனை முறை வருமாறு. காலையிலேயே சிறு நீரை கண்ணாடி பாத்திரத்தில் எடுங்கள். அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விடுங்கள். அதன் பின் அது எப்படி செயற்படுகிறது என்று கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் உள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது. மேலும் எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் காலதாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ, அல்லது அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது. இப்பரிசோதனை எளிமையான சித்த மருத்துவமாகும். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்களாகும்.
ஆதாரம் : 100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள் என்ற நூலில் இருந்து.

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்


உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்bksureshv@gmail.com

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்
இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.1 ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.
2 தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.
3 தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.4 அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.
5 வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
6 அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ள ‘டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.7 தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.
8 அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம்.
9 நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.
கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:
இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) , மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு.இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை.
ஒரு நாளைக்கான உணவுப் பட்டியல்
நேரம் சாப்பிட வேண்டிய உணவு
காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி)
காலை 8 மணி இட்லி – 2 (அ) இடியாப்பம் – 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை – 1. தொட்டுக் கொள்ள சாம்பார் (அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்.) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.
முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் – 1 (அ) 2 டம்ளர்.
நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு – அரை கப், பொரியல் – 1 கப், தயிர் பச்சடி – 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்.)
மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1 டம்ளர் (200 மி.லி)
மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு
இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி – 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ)
காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு – 1 கப் (அ) கேழ்வரகு தோசை – 1. சாம்பார், காய்கறி சாலட் – 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா(காய்கறிக் கலவையுடன்) – ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி – 1 கப்.
படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் – 1 டம்ளர். இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.

உடல் எடையைக் குறைக்க -- Email : bksureshv@gmail.com

சாப்பிடும் உணவு சிறிய அளவில் இருந்தால்போதும்,ஆனால் அந்த உணவுகள் தரமான உணவுகளாக இருக்க வேண்டும்! இப்படிச் சாப்பிட்டு வந்தால் சாப்பிட்ட திருப்தியும் அதே நேரத்தில் குறைந்த அளவே உடலில் சேரும் உணவுகளால் உடல் எடையும் பராமரிக்கப்படும்.


தரமான உணவுகளை வேளை தவறாமல் குறைவாகச் சாப்பிட்டாலும் தினமும் உடற்பயிற்சியும் அவசியம் தேவை.

உடல் எடையைக் குறைக்கவும் அதே நேரத்தில் ஒல்லியான கச்சிதமான தோற்றத்தைப் பராமரிக்கவும் கீழ்க்கண்ட பத்து உணவுகள் மிகச்சிறந்த உணவுகளாக சத்துணவு நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.சேனைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு!இந்த இரண்டும் மெதுவாக சீரணிக்கப்படுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் வளர்சிதை மாற்றம் மிகச் சரியாக நடக்க இந்த உணவுகள் உதவுவதால் உடல்எடை குறையும்.கொழுப்பு சேமிப்பாகாமல் தடுக்கும்.சேனைக்கிழங்கு ஆண்டு முழுவதும் கிடைக்கும். வள்ளிக்கிழங்கை சீசனில் பயன்படுத்தலாம்.ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை பழங்களில் மற்ற பழங்களில் உள்ளதைவிட எளிதில் கரையக்கூடிய பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகமுள்ளது நார்ச்சத்து உணவுகள் மெதுவாக ஜீரணமாகும். இதனால் உடலிலுள்ள விஷப் பொருள்களும்,சேமிப்பாக உள்ள அதிகக் கொழுப்பும் கரைக்கப்பட்டு வெளியேற்றப்படும். நார்ச்சத்து அதிகமுள்ள இந்த மூன்று பழங்களும் உணவு நன்றாகச் சாப்பிட்ட திருப்தியையும் எளிதில் வழங்கும்.நன்மை தரும் சாண்ட்விட்சுகள்21 வாரங்களில் 40 பவுண்டு (1 பவுண்டு = 650 கிராம்) எடையைக் குறைக்க (அதுவும் உறுதியாய்) தக்காளி, வெள்ளரிக்காய், முளைவிட்ட தானியங்கள், லெட்டூஸ், வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து சாலட் போல தயாரியுங்கள்.உங்களை கவர்ந்த சாண்ட்விட்ச்சுகள் இவை. கோதுமை மாவினால் செய்யப்பட்ட பன்வகைகளுடன் இவற்றைச் சேர்த்து சாப்பிடலாம். இந்த உணவுகளிலும் நார்ச்சத்து அதிகம்.தானியங்கள்
கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு சம்பா கோதுமை, ரவை போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றை பாசிப்பருப்பு, தேங்காய்ச் சட்னி போன்றவற்றின் மூலம் புரதமும் கிடைக்கும்படி சாப்பிடலாம். எப்போதும் பருப்பு வகைகள் சேர்ந்தே மேற்கண்ட தானிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். இதனால் சாப்பிடும் அளவும் குறையும்.காய்கறி சாலட்
இதில் முக்கியப்பங்காக கீரைவகை இருக்க வேண்டும்.அதன் மேல் தயிரை லேசாக ஊற்றி மூடவும். அதன் மேல் உங்களுக்குப் பிடித்தமான காய்கறித் துண்டுகளைப் போடவும். அசைவம் உண்பவர்கள் எனில் இத்துடன் புரதத்திற்காக அவித்த வஞ்சிரமீன் ஒன்றும் சேர்த்துக் கொள்ளலாம். சைவம் எனில் அவித்த மொச்சை நான்கு தேக்கரண்டிகள் சேர்த்துக் கொள்ளவும்.பாதம் பருப்புக்கள்ஒமேகா 3 என்ற நன்மை செய்யும் கொழுப்பு அமிலம், புரதம், கார்போஹைடிரேட் போல அவசியம் தேவை. எனவே, தினமும் நல்ல கொழுப்பு அமிலம் கிடைக்க ஏழு பாதாம் பருப்புகளைச் சாப்பிட்டு வாருங்கள். பருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம்.


கொண்டைக்கடலை மசியல்ஊற வைத்து அவித்த கொண்டைக்கடலையை மிக்சியில் கூழாக்கவும். இதில் எலுமிச்சை சாறு சிறிதளவும்,நல்லெண்ணெயில் வதக்கிய வெள்ளைப்பூண்டுப் பற்களையும் போட்டுக் கலக்கவும். சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிட புரதம் நிறைந்த கூழ் இது.


தக்காளி, வெங்காயம்


இவற்றை சிறிதாக அரிந்து கலந்து வைத்துக் கொண்டு சாப்பிடவும். இல்லையெனில் பீன்ஸ் கூட்டு, முட்டைக்கோஸ் சூப் சாப்பிடவும்.

மேற்கண்ட அனைத்து உணவுகளும் தரமான உணவுகள் என்பதால் உடல் எடை கட்டுப்பாட்டுடன், ஆரோக்கியமாகத் திகழும். குண்டு மனிதர்கள் 21 வாரங்களில் எடை குறைந்து உடல், மனம் லேசாக இருப்பதை எளிதில் உணரலாம்.
யோகார்ட்


காய்கறி சாலட் போல ஒவ்வொரு வேளை உணவின்போதும் ஒரு கப் யோகார்ட் (தயிர்) சாப்பிடவும். கொழுப்புக் குறைவாக உள்ள அதிசய உணவு இது.சுவை கூட்டப்பட்ட யோகார்ட்,தயிரைப்போல நன்மை அளிக்கக் கூடியதே!

எடையைக் குறைக்க 7 வழிகள்!

bksureshv@gmail.com


எடையைக் குறைக்க 7 வழிகள்!


உங்கள் எடை கூடிவிட்டதா? எப்படிக் குறைப்பது? எந்த முறையைப் பின்பற்றுவது? இப்படி யோசனையிலேயே நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறதா?

இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:

1. உடற்பயிற்சி: 
வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.

2. பசித்தால் மட்டுமே சாப்பிடவும்: 
"அப்படித்தான் செய்கிறேன்" என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும். எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், இனிப்பு என்று சாப்பிட்டிருப்பீர்கள்? எடையை மேலும் கூட்டவே இது உதவுகிறது!

3. எதைச் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளவும்: 
"நான் 4 பிஸ்கெட்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடிச்சேன்" என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளிலும் ஜூஸிலும் எத்தனைக் கலோரிகள் இருந்தன என்று தெரியுமா? எதைச் சாப்பிட்டால் நல்லது என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

4. தண்ணீர் தண்ணீர்: 
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும். அத்தோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் இது சுத்தம் செய்கிறது.

5. உட்கொள்ளும் அளவு: 
மதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால், இரவில் உட்கொள்ளும் அளவை குறைக்கவும். காலையில் சாப்பிட்டதைவிட, மதியம் சற்று குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.

6. ரிலாக்ஸ் ப்ளீஸ்: 
தினமும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், சில சமயங்களில் நம்மை அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டலாம். அதனால் தினமும் 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய எடுத்துக் கொள்ளவும். 

7. "நான் குண்டு" என்று யோசிப்பதை தவிர்க்கவும்:
நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய நினைப்பை விட்டு, மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் எப்படி மாறுவீர்கள் என்பதை யோசிக்கவும்.

இன்னும் என்ன தாமதம்? உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்!